ஈரான் உச்ச தலைவருக்காக களமிறங்கிய ஆபத்தான கருப்பு படை!. பின்னணியில் NOPO: அமெரிக்காவிற்கு கசிந்த இரகசிய தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி NOPO எனும் படையின் கண்காணிப்பில் உள்ளதாகவும், படையின் பின்னணி குறித்தும் அமெரிக்காவுக்கு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த மாதம் 28 ம் திகதி போரை தொடங்கியமுதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
'நோபோ' படையின் கட்டுப்பாடு
இதையடுத்து ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொஜ்தபா கமனேியின் தேர்வை இஸ்ரேல், அமெரிக்கா விரும்பாத நிலையில், அவரையும் கொல்ல இஸ்ரேல் , அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்து கோமா நிலையில் உள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்கா தரப்பில், ''மொஜ்தபா கமேனி படுகாயத்துடன் உயிருடன் இருக்கலாம்'' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் மொஜ்தபா கமேனி NOPO எனும் படையின் கண்காணிப்பில் உள்ளதோடு, இதுதான் அமெரிக்காவுக்கு அந்த NOPO படையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐஆர்ஜிசி-யை விட ஆபத்தான படை
இது தவிர ஈரானில் இருக்கும் ஐஆர்ஜிசி-யை விட ஆபத்தான படையான NOPO கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், கருப்பு சீருடையில் வலம் வரும் படை உள்நாட்டில் அரசுக்கு எதிரான கலவரங்களை கட்டுப்படுத்தும் பணியையும் மேற்கொள்வார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டிலேயே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக நோபோ' படையை அமெரிக்க தடை செய்திருந்த நிலையில், தற்போது ஈரான் உச்ச தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் தற்போது மெஜ்தபா கமேனி இந்த 'நோபோ' படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri