எரிபொருள் கையிருப்பு:சினோபெக் வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கை சந்தையில் தனது விநியோகத்தை மேற்கொண்டிருக்கும் சினோபெக் பொற்றோலிய நிறுவனமும் தங்களிடம் கையிருப்பு இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் தீர்ந்து விடும் என பீதி அடையத் தேவையில்லை,எங்களது கிடங்குகளில் போதுமான எரிபொருள் இருப்பதாகவும் சினோபெக் கூறியுள்ளது. ஒரு அறிக்கையில், சினோபெக் மேலும் கூறியுள்ளதாவது,
பீதியடைய தேவையில்லை
பீதியடைந்து எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சிக்காதீர்கள்.எங்கள் அனைத்து சினோபெக் எரிபொருள் நிலையங்களிலும் போதுமான எரிபொருள் இருப்பு மற்றும் நிலையான விநியோகம் உள்ளது.

சினோபெக் எரிபொருள் நிலையங்கள் பிளாஸ்டிக் கேன்கள் அல்லது பிற வெளிப்புற கொள்கலன்களில் எரிபொருள் நிரப்பப்படாது. எரிபொருள் விநியோகம் தொடர்ந்து தடையின்றி இருக்கும்.
அமைதியாகவும் ஒழுங்காகவும் எரிபொருள் நிரப்புவதன் மூலம் ஒத்துழைக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.