அமெரிக்க ஜனாதிபதி சீனாவிற்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால், சீன இறக்குமதிகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனா ஈரானுக்கு தோளில் வைத்து ஏவக்கூடிய 'மேன்பேட்ஸ்' (MANPADs) எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறைத் தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், சீன ஜனாதிபதியுடன் தமக்கு நல்லுறவு இருப்பதால் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று தாம் நம்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒருவேளை ஆயுதப் பரிமாற்றம் உறுதி செய்யப்பட்டால் "மலைக்க வைக்கும் அளவிலான" 50 சதவீத வரிவிதிப்பை சீனா எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனத் தூதரகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சீனா மோதலில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்பிற்கும் ஆயுதங்களை வழங்கவில்லை; இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு பொறுப்புள்ள நாடாக சீனா தனது சர்வதேச கடமைகளைச் சரியாக நிறைவேற்றி வருவதாகவும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி பதற்றத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam