அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து ஈரானின் நிலைப்பாடு
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பில் தெஹ்ரான் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் குறித்த பேச்சுவார்த்தை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதற்கு நேர்மாறாக, அதாவது ஈரானும் அமெரிக்காவும் அடுத்த வாரம் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்குவார்கள் என நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், தற்போது அமெரிக்காவுடனான இராஜதந்திரம் தமது நலனுக்கு உகந்ததா என்பதை தெஹ்ரான் மதிப்பிட்டு வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தற்போது வரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan