இஸ்ரேல் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ஈரான் : செய்திகளின் தொகுப்பு
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் கதை முடிந்து விடும்” என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலானது அதன் அண்டை நாடுகளுக்கும் பரவலாம் என்ற பதற்றமும் அச்சமும் காணப்படும் நிலையிலேயே ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை லெபானின் மீது பாரிய தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அது இஸ்ரேல் பிரதமர்நெத்தன்யாகுவின் இறுதி முடிவாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |