இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான்..! நெருக்கடியில் அமெரிக்கா - இஸ்ரேல்
அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் தொடுத்தால், வளைகுடா பகுதியில் உள்ள கடலடி தொலைத்தொடர்பு மற்றும் இணையக் கேபிள்களை குறி வைத்துத் தாக்க விரிவான திட்டங்களை ஈரான் வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் பழுதுபார்ப்பதைத் தடுத்து, நீண்ட காலத்திற்கு இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை முடக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகளை கோடிட்டு ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
குறி வைக்கப்படும் இணையக் கேபிள்கள்
இதன்படி, ஹோர்முஸ் நீரிணைக்கு அடியில் செல்லும் ஏழு முக்கிய இணையக் கேபிள்களை குறி வைக்க முடியும் என்று ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை(IRGC) தெரிவித்துள்ளது.

உலகளாவிய இணையப் போக்குவரத்தில் 1%க்கும் குறைவான பங்குகளே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றாலும், இத்தகைய தாக்குதல்கள் நிதிப் பரிவர்த்தனைகள், மின்-வணிகம் (e-commerce) மற்றும் மேகக் கணிமை (cloud computing) சேவைகளை மெதுவாக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில், வளைகுடா நாடுகள் தொழில்நுட்பத் துறையிலும் AI மையங்களிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ள நிலையில், அமெரிக்கக் கொள்கைகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வளைகுடா அரசுகளும் பெருநிறுவனங்களும் வோஷிங்டனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே ஈரானின் நோக்கம் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈழக் கோரிக்கை ஆதரவாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் அரசு! நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய ஆபத்தென எச்சரிக்கை