ஈரானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கத்தார்! ட்ரோன்களை இடைமறித்ததாக அறிவிப்பு
ஈரானின் இரண்டு சுகோய்-24 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் ஈரான் ஏவிய 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 5 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக கத்தார் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்கள் மற்றும் ஈரானிய பழிவாங்கல் ஆகியவற்றின் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போர் பதற்றத்தினை அதிகரித்துள்ளது.

இந்நிவையில், கத்தார் விமானப்படை இரண்டு SU-24 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், ஈரானால் ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஐந்து ட்ரோன்களும் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
பிற நாடுகளில் உள்ள இலக்குகள் மீது பதிலடி தாக்குதல்
"அனைத்து ஏவுகணைகளும் அவற்றின் இலக்குகளை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டதால், செயல்பாட்டுத் திட்டத்தின்படி, அச்சுறுத்தல் கண்டறியப்பட்டவுடன் உடனடியாக தீர்க்கப்பட்டது," என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய நாட்களில் கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் உள்ள இலக்குகள் மீது ஈரான் தொடர்ச்சியான பதிலடி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri