சற்று முன்னர் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்
ஈரானிய வான்வெளியை மீறியதாகக் கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த விமானம், ஈரானிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் ஒரு விரோத ஆளில்லா விமானம் என அடையாளம் காணப்பட்டு பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC கூறியுள்ளது.
ஈரானிய இராணுவ அதிகாரி மற்றும் செய்தித் தொடர்பாளரான இப்ராஹிம் ஸோல்ஃபகாரி இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
MQ-9 ரீப்பர் விமானம்..
மேலும், அமெரிக்காவால் எதிர்காலத்தில் ஏதேனும் போர்நிறுத்த மீறல்கள் ஏற்பட்டால் பதிலடி கொடுக்கும் உரிமையை ஈரான் கொண்டுள்ளது என்றும் அது IRGC படை தெரிவித்துள்ளது.

தற்காப்பு நடவடிக்கைகள் எனக் கூறப்படும் ராக்கெட் ஏவுதளங்கள் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
MQ-9 ரீப்பர் என்பது நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட ஒரு அமெரிக்க கண்காணிப்பு மற்றும் ஆளில்லா தாக்குதல் விமானமாகும். இது முன்னர் மத்திய கிழக்கு வான்வெளியில் பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
YOU MAY LIKE THIS VIDEO