நாட்டு துப்பாக்கிகளுடன் சிக்கிய விவசாயிகள்..! அதிகாலையில் சி.ஐ.டியினரின் அதிரடி நடவடிக்கை
மட்டக்களப்பு - குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் இரு விவசாயிகள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(25.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் துப்பாக்கிகளுடன் கைது
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று(25) அதிகாலையில் குடும்பிமலை வயல் பகுதியை குற்றப்புலனாய்வுத்துறை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது அந்த பகுதியில் ஒளித்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குடும்பிமலை வயல் வட்டானை தலைவரான 45 வயதுடையவர் விவசாயி ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்த இருவரையும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இன்று(26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை - மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு