இதுதான் அமெரிக்கா - குழந்தைகளை புதைக்க தோன்றிய குழிகள்... ஈரான் வெளியிட்ட புகைப்படம்!
அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரு தொடக்கப்பள்ளியில் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளுக்காக தோண்டப்பட்ட கல்லறைகள் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் x தளத்தில் ஒரு புகைக்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியதில் இருந்து நடைபெற்ற தாக்குதலில் மினாப் பள்ளியின் மீதான தாக்குதல் பேசுபொருளாக மாறியது.
பெரும் சோகம்
தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் ஆரம்பப் பள்ளிமீது சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 165 முதல் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரான்மீது கடந்த நான்கு நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் என இரண்டு நாடுகளும் தாக்குதலை தொடர்ந்தாலும், இந்தத் தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து சிலர் பேசிய காணொளிகளும், ரத்தக் கறைகளுடன் உள்ள பள்ளிப்பை புகைப்படங்களும் இணையத்தில் பேசுபொருளாகின.
வெளியான புகைப்படம்
இறந்த குழந்தைகளின் சடலங்கள் இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது.
அமெரிக்கத் தரப்பில் அமெரிக்கா பள்ளிகளை குறிவைக்காது, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
These are graves being dug for more than 160 innocent young girls who were killed in the US-Israeli bombing of a primary school. Their bodies were torn to shreds.
— Seyed Abbas Araghchi (@araghchi) March 2, 2026
This is how "rescue" promised by Mr. Trump looks in reality.
From Gaza to Minab, innocents murdered in cold blood. pic.twitter.com/cRdJ3BELOn
இந்நிலையில் இந்த தாக்குதலில் இறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை புதைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளின் புகைப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது. இது இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், "அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரு தொடக்கப்பள்ளியில் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளுக்காக தோண்டப்பட்ட கல்லறைகள்.
அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளன மிஸ்டர் ட்ரம்ப் வாக்களித்த 'மீட்பு' (rescue) என்பது நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறது.
காசா முதல் மீனாப் (Minab) வரை, அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri