ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய பாடகி: தண்டனை வழங்க தயாராகும் ஈரான்
ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்ட் அஹமதி(Parastoo Ahmadi) இணைய நிகழ்ச்சி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நாடான ஈரானில் சியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
இசை நிகழ்ச்சி
இதற்கமைய பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள பாடகி பரஸ்ட் அஹமதி, கடந்த 11ஆம் திகதியன்று, இணையத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.
எனினும் அதன்போது அவர் ஹிஜாப் அணியாமல் பாடல்கள் பாடினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த இசை நிகழ்ச்சியின்போது, தமக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம் என்றபோதிலும், தமது நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது.
இருப்பினும் நாட்டுக்காக தமது ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துவதாக அவர் கூறியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |