விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதார- இராணுவத் தடை! இலங்கையின் ஆதரவை நாடும் ஈரான்
ஈரான் மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை எதிர்கொள்வதில் அந்தநாடு இலங்கையின் ஆதரவை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டி ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கடந்த மாதம் ஐ.நா. பாதுகாப்பு பேரவைக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விரிவான செயல் திட்டம்
கொழும்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குழுவினருடன் உரையாற்றிய ஈரானிய தூதர் டொக்டர் அலிரேசா டெல்கோஷ், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு அனுப்பிய கடிதத்தில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, மீண்டும் தடைகளை விதிப்பதன் சட்டவிரோதத்தை எடுத்துரைத்ததாகவும், E3 நாடுகளால் அமைக்கப்படும் மோசமான முன்னுதாரணம் தொடர்பிலும் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில், ஆறு உலக வல்லரசுகளுடன் கூட்டு விரிவான செயல் திட்டத்தில் ஈரான் கையெழுத்திட்ட பின்னர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரானுக்கு எதிரான தடைகளை நீக்கியது. ஆனால் மீண்டும் கடந்த சனிக்கிழமை தடைகள் நடைமுறைக்கு வந்தன.
ஐ.நா. தீர்மானத்தின் மூலம் நீக்கப்பட்ட தடைகளை மீண்டும் விதிப்பது சட்டப்பூர்வமாக அடிப்படையற்றது மற்றும் நியாயமற்றது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சரின் கடிதம் சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச சட்டத்தின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் E3 நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை தனது கவலையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 10 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
