ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்!
இரண்டு அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானில் அணுசக்தி தொடர்பான இரண்டு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.
ஆனால், கதிரியக்கப் பொருள் எதுவும் கசியவில்லை என்று ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலியப் படைகள்
வடமேற்கு ஈரானில் உள்ள கோண்டாப் கனநீர் வளாகம் அமெரிக்க - இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் (IRNA) டெலிகிராமில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புக்கள் எதுவும் இல்லை என்று மார்க்கஸி மாகாண அதிகாரி ஒருவர் கூறியதாக IRNA மேற்கோள் காட்டியுள்ளது.
இரண்டாவது தாக்குதலில், யஸ்த் நகரின் அர்தகானில் உள்ள யெல்லோகேக் உற்பத்தி நிலையம் தாக்கப்பட்டது.
அந்த இடத்திற்கு அப்பால் கதிரியக்கப் பொருள் எதுவும் கசியவில்லை என்று IRGC-உடன் இணைந்த ஃபார்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri