அமெரிக்காவிற்கு ஈரான் வழங்கிய உறுதிமொழி!
அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் அணு திட்ட பேச்சுவார்த்தையில் நிலவும் வேறுபாடுகளை சமநிலைப்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களில் விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பல விவரங்கள் பேசப்பட வேண்டியுள்ளது,” என ஜெனீவாவில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்ற அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

எங்களின் நிலைப்பாடுகளில் உள்ள சில திறந்த இடைவெளிகளை சமாளிக்க அடுத்த இரண்டு வாரங்களில் விரிவான முன்மொழிவுகளுடன் திரும்புவோம் என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல்கள், அணு திட்டம் தொடர்பான பதற்றத்தை குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் இறுதி உடன்பாடு எட்ட பல முக்கிய அம்சங்களில் இன்னும் விவாதங்கள் தேவைப்படுகின்றன என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்த கட்ட முன்மொழிவுகள் வெளிவந்த பின்னரே பேச்சுவார்த்தைகள் எந்த திசையில் நகரும் என்பது தெளிவாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri