தாக்குதல்கள் தொடர்ந்தால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது கைவைப்போம்: ஈரான் அதிரடி
அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்கள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஆயுதப் படைகள் அமைப்பின் தலைமை தளபதி இப்ராஹிம் ஜபாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கர்கள் தங்கள் பெரும்பாலான விமானங்களை சைப்ரஸில் நிறுத்தியுள்ளனர்.
பல ஏவுகணைகளை ஏவுவோம்
அவர்களை வெளியேற கட்டாயப்படுத்த நாங்கள் அங்கு பல ஏவுகணைகளை ஏவுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்கள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக கூறி, கடந்த 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை தொடங்கின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரு நாட்டு படைகளும் நடத்திய சரமாரி தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியும், அவருடைய குடும்பத்தினரும் பலியானார்கள்.
கமேனியின் மனைவி மன்சரே கொஜஸ்தே தாக்குதலில் காயமடைந்து கோமா நிலையில் இருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை அலை, அலையாக வீசி தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைத்தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam