மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்
அமெரிக்கக் கடற்படையினரின் துறைமுக முற்றுகை மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஈரானின் மின்சார உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் கோரிக்கை விடுத்துள்ளார்.
"எதிரிகள் நமது உட்கட்டமைப்புகளை அழித்து, நம்மைச் சுற்றி முற்றுகையிட்டுள்ளனர்; இதன் மூலம் மக்களை அதிருப்தியடையச் செய்து அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டுவதே அவர்களின் நோக்கம்" என்று அவர் சாடியுள்ளார்.
வீடுகளில் தேவையற்ற மின்விளக்குகளைத் தவிர்த்து, சிக்கனமாகச் செயல்படுவதன் மூலம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரப் பயன்பாடு
இதற்கிடையில், ஈரானின் மின்சார நிறுவனமான 'தவானிர்' (Tavanir), மின்சாரப் பயன்பாட்டைக் கண்காணிக்குமாறும், அங்கீகரிக்கப்படாத மின்சாரப் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானின் அரசு ஊடகம் பகிர்ந்துள்ள வீடியோவில், மின்சாரத்தைச் சேமிப்பதன் அவசியம் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகையினால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஈரானில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இருபுறமும் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை