ஈரான் அரசு திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு
ஈரானிய அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலைகளை மேற்கொள்வதாக நோபல் சமாதான விருது வென்ற ஈரானிய மனித உரிமை செயற்பாட்டாளர் ஷிரின் எபாதி குற்றம் சுமத்திள்ளார்.
ஈரானில் போராட்டக்காரர்களை அடக்குவதற்கான நடவடிக்கைகள், தகவல் தொடர்புகளை துண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசினால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அவர் சமூக ஊடகமொன்றில பதிவிட்டுள்ளார்.
ஈரானில் இணைய முடக்கங்கள்
இணையத் தொடர்புகள் முடக்கப்பட்டதும், சாட்சிகளை மிரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, அரசு மௌனத்தில் கொன்று பின்னர் அதை அழிக்க முயற்சிக்கிறது என்பதாக தெரிவித்துள்ளார்.
இணைய முடக்கத்தின் மறைவில் ஒழுங்கமைக்கப்பட்ட கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது எனவும், இது ஈரானில் மனித உரிமை மீறல்களின் ஒரு திட்டமிட்ட நிலை என்பதை உணர்த்துகிறது எனவும் எபாதி தெரிவித்துள்ளார்.

இணைய சேவைகள் உடனடியாக மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனவும் , இந்நிகழ்ச்சிகளுக்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனுவும் எபாதி வலியுறுத்தியுள்ளார்.
ஈரானில் இணைய முடக்கங்கள் மற்றும் தகவல் ஒடுக்கல்கள் மனித உரிமை மீறல்களை உலகக் கண்காணிப்பிலிருந்து மறைக்க பயன்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.