ஈரானில் களமிறக்கப்பட்டுள்ள பெண் கொமாண்டோ படை (Video)
ஈரானில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்தமைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களை முறியடிப்பதற்கு பெண் கொமான்டோக்களையும் ஈரான் அரசாங்கம் களமிறக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் பின்னர். பொலிஸ் சேவையில் பெண்கள் 2003 ஆம் ஆண்டு முதல் தடவையாக இணைக்கப்பட்டனர்.
பெண்களை மாத்திரம் கொண்ட விசேட படையணியில் சுமார் 7,000 பேர் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
தற்போது பெண்களின் ஆர்ப்பாட்டங்களை முறியடிப்பதற்கு பெண்கள் படையணியும் களமிறக்கப்படடுள்ளது.
தலையை மறைக்கும் ஹிஜாப் ஆடை அணியாததால் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கைது செய்யப்பட்ட 22 வயதான மாசா அமினி எனும் பெண், பொலிஸ் காவலில் இருக்கும்போது கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.
பொலிஸாரினால் தலையில் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
எனினும், இதை மறுத்துள்ள பொலிஸார், மாரடைப்பு காரணமாகவே மாசா அமினி உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
மாசா மாசா அமினியின் மரணத்துக்கு எதிராக ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. பெண்கள் பலர் தமது ஹிஜாப்பை எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு உதவுமாறு மேற்படி பெண் கொமாண்டோக்கள் கோரப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுபவர்களை கண்டுபிடிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியிலும் மேற்படி கொமாண்டோக்கள் மாறு வேடத்தில் நுழைந்துள்ளனர் எனவும் நம்பப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது உலக செய்திகளின் தொகுப்பு,

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
