இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் : அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அண்மையில் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் துணை தூதரகம் மீது, இஸ்ரேல் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது.
இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.
இதில், மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
ஹிஜ்புல்லா பயங்கரவாத குழு
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம் ஒன்றை அனுப்பியது. ஈரான் ஜனாதிபதியின் அரசியல் விவகாரத்திற்கான பணியாளர் துணை தலைவர் முகமது ஜம்ஷிதி எழுதிய அந்த கடிதத்தில், நெதன்யாகுவின் வலையில் சிக்க வேண்டாம்.
அதில் இருந்து, அமெரிக்கா விலகி இருக்க வேண்டும். அதனால், நீங்கள் தாக்குதலில் இருந்து தப்புவீர்கள் என தெரிவித்து உள்ளார். இதற்கு பதிலாக, அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஈரானிடம் அமெரிக்க அரசு கேட்டு கொண்டுள்ளது என ஜம்ஷிதி கூறியுள்ளார்.
குறிப்பாக பொதுமக்களை விட, இஸ்ரேலுக்குள் ராணுவம் அல்லது நுண்ணறிவு இலக்குகளை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்றோ நேரடியாகவா அல்லது லெபனானில் பதுங்கி உள்ள ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களை கொண்டு தாக்குதல் நடத்துமா என்ற விவரம் எதுவும் வெளிவரவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
