அவை வெடித்துச் சிதறும்! ட்ரம்ப் விடுத்துள்ள அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை அதிரடியாக இரத்து செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப், அந்த நாடு கடைசி நேரத்தில் கொடுத்த ஒப்புதலையும் நிராகரித்துள்ளார்.
இதனால் ஈரானுடன் போர் தொடுப்பதா அல்லது வேண்டா வெறுப்பாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்பதா என்ற இக்கட்டான நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில், எப்படியாவது மத்திய கிழக்கு போரில் வெற்றி பெற வேண்டும் என்பதில் ட்ரம்ப் பிடிவாதமாக இருக்கிறார்.
நான் ஒரு ஈரானிய உளவாளியாக இருந்திருந்தால்.. - ட்ரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்
கடும் மிரட்டல்..
இதன் காரணமாக, மோதலை இன்னும் தீவிரப்படுத்துவது அல்லது ஹோர்முஸ் நீரிணையை முடக்கி ஈரானை பணிய வைப்பது என மூன்று ஆபத்தான வழிகளை அவர் கையில் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், காலை ட்ரம்ப் வெளியிட்ட ஒரு தகவல் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஈரானின் எண்ணெய் குழாய்கள் இன்னும் மூன்று நாட்களில் உள்ளிருந்தே வெடித்துச் சிதறப் போகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.
இது ஏதோ இயந்திரக் கோளாறோ அல்லது பூமிக்கு அடியில் நடக்கும் மாற்றமோ தெரியவில்லை, ஆனால் அந்த குழாய்கள் வெடிப்பது உறுதி என்றும், அப்படி நடந்தால் ஈரானால் அதை மீண்டும் சரி செய்யவே முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானியர்களே இன்னும் மூன்று நாட்கள் தான் மீதம் உள்ளன என்று சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு முயற்சி நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பேசிய ட்ரம்ப், ஈரானிய நிர்வாகத்தில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும், அங்கு யார் முடிவெடுக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும் கிண்டலடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இழுத்தடிக்கப்படுகின்றது - தவிசாளர் யுகதீஸ் விசனம்
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam