ஈரானின் திடீர் தீர்மானத்தால் மீண்டும் பதற்றம்.. ட்ரம்பிற்கு திட்டவட்டமாக பதிலடி!
இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் இதுவரை உடன்படவில்லை என்று ஈரானிய ஊடகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அந்நாட்டு அரச ஊடகங்கள் தொடர்புடைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தொடர்ச்சியான முற்றுகையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இடமில்லை..
ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்தப் பேச்சுவார்த்தை மறுப்புச் செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவால் "தங்களது விருப்பத்தைத் திணித்து" மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை முடக்க முடியாது என்று ஈரானின் பிரதி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரானிய இராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளமை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக, தற்காலிகமாகத் திறந்துவிடப்பட்டிருந்த இந்த முக்கியமான கடல் வழித்தடம், தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகைகளுக்குப் பதிலடியாக மீண்டும் ஈரானிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதோடு, சர்வதேச எண்ணெய் விநியோகத்திலும் பாதிப்புக்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam