ஈரானின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்குப் பின்னர் 69 வயதான துணை ஜனாதிபதி மொஹமட் மொக்பரை தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி நடவடிக்கை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் 50 நாட்களுக்கு பதில் ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் அயதுல்லா கமேனி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானுக்கு பின்னடைவு ஏற்படாது
இதனையடுத்து புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று அவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்தின் பின்னர் ஈரானுக்கு எந்த விதத்திலும் பின்னடைவு ஏற்படாது எனவும் அவர் அக்கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்ராஹிம் ரைசியின் மரணம் பாரதூரமான சம்பவம் என்றாலும் ஈரான் அரசாங்கத்தின் இருப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாது என பதில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025