ஒலியின் வேகத்தை மிஞ்சும் புதிய ஏவுகணை: ஈரானின் புதிய சாதனை
ஒலியின் வேகத்தைப் போல் 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்லக் கூடிய (ஹொப்பா்சோனிக்) ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியது.
இந்த நவீன ரக ஏவுகனையை நேற்றையதினம்(07.06.2023) அறிமுகப்படுத்தியுள்ளது.
‘எதிரிகளின் நிலங்களை வெல்பவா்’ என்ற பொருள்படும் வகையில் ‘ஃபட்டா’(Fattah) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, ஒலியைப் போல் 15 மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லும் எனவும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் அதனை இடைமறித்து அழிக்க முடியாது என தெரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1,400 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை இந்த ஏவுகணையால் தாக்கி அழிக்க முடியும்.
#FPVideo: #Iran unveiled its first domestically produced hypersonic ballistic missile, named “#Fattah”. Iran claims the missile is capable of travelling 15 times the speed of sound. Missile Fattah, meaning “conqueror” in Farsi, has a range of up to 1,400 km. pic.twitter.com/WnaDrCMqvZ
— Firstpost (@firstpost) June 7, 2023
இருந்தாலும், ‘பலிஸ்டிக்’ வகையைச் சோ்ந்த அந்த ஏவுகணையின் பாதையை அமெரிக்காவின் பேட்ரியாட் போன்ற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் எளிதில் ஊகிக்க முடியும் என்பதால் ஈரானின் இந்தத் தகவல் சந்தேகத்துக்குரியது என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.
முன்னதாக, தனது புதிய தொலைதூர ஏவுகணையை தலைநகா் டெஹ்ரானில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஈரான் அறிமுகப்படுத்தியது.
‘கொராம்ஷாா்-4’(khorramshahr 4) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, 1,500 கிலோ எடை கொண்ட வெடிபொருளுடன் 2,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் என்று அதிகாரிகள் கூறினா்.
அந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இஸ்ரேலை தனது பரம எதிரியாகக் கருதும் ஈரான், பாலஸ்தீன அமைப்புகளுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது.
தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனா்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இதுபோன்ற ஏவுகணைகளை ஈரான் அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.