இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: போர் தீவிரமடைவதால் பதற்றம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய இராணுவம் இஸ்ரேலின் மையப்பகுதிகளை இலக்கு வைத்து புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
குறிப்பாக டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் தனது பதிலடி
இந்த தாக்குதலில் பெடா திக்வா (Petah Tikva) பகுதியில் கிளஸ்டர் வகை வெடிகுண்டுகளைக் கொண்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மூவர் இலேசான காயம் அடைந்துள்ளதாகவும், மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் தனது பதிலடியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறிக்கும் முயற்சியில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Iron Dome) தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன இருப்பினும், சில ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri