ஈரானின் அவசர எச்சரிக்கை - உலகிற்கு இடியாக மாறிய ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு!
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா எடுத்துள்ள அதிரடி முடிவு சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால் ஈரான் நிலைகுலைந்துள்ள சூழலில், ரஷ்யா தனது அதிநவீன உளவுத் தகவல்களை (Intelligence Sharing) ஈரானுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கப் படைகளின் நகர்வுகள் மற்றும் போர்க்கப்பல்களின் இருப்பிடங்களை துல்லியமாக ஈரான் கண்டறிய ரஷ்யா உதவுவதாக வெளியாகியுள்ள தகவல் வாஷிங்டனை கொதிப்படையச் செய்துள்ளது.
இதற்கிடையே, ரஷ்யாவின் ஆதரவு பலத்துடன் ஈரான் தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. "எங்கள் வான் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு ஏவுகணையும், அதை ஏவிய நாடுகளுக்கே திரும்புவதை ரஷ்யத் தொழில்நுட்பம் உறுதி செய்யும்" என ஈரான் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
இவ்விடயம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச, உள்நாட்டு தகவல்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,