மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - அங்கிருக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் அங்கிருக்கும் இலங்கையர்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கை சமூகத்தை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை தூதரகங்கள் மற்றும் இராஜதந்திரப் பணியகங்களும் அமைச்சகத்துடன் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்காக வாட்ஸ்அப் இலக்கம்
அத்துடன், மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்கள் உதவி பெறுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் +94 71 980 2822 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நெருக்கடி நிலை இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு இதுவரை குறிப்பிடத்தக்க தாக்கமோ அல்லது தீங்கோ ஏற்படவில்லை என்பதை அமைச்சகம் வலியுறுத்துகிறது.
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ரோஹினி கொடுத்த பத்திரத்தில் கையெழுத்து போட போன மனோஜ், எப்படி தப்பித்தார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam