மத்திய கிழக்கு போர் சூழல்! கேள்விக்குறியாகும் இலங்கையர்களின் பாதுகாப்பு - அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை
இஸ்ரேல் - ஈரான் இடையிலான தீவிர இராணுவ மோதல்களை அடுத்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் பாதுகாப்பு
அவரது பதிவில் மேலும் தெரிவிக்கையில்,
ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
அவர்களின் உயிரைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசு உடனடியாக இராஜதந்திர ரீதியிலான மற்றும் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன் கருதி அரசு கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சஜித் பிரேமதாஸவின் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெறுகின்றது.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam