ஈரான் அரசியலில் பெரும் மாற்றம்! அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை கணித்த அமெரிக்க உளவுத்துறை
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னதாகவே, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அதிகாரம் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA) கணித்திருந்தமை தற்போது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஈரானின் அரசியலில் பெரும் மாற்றம்
சிஐஏ-வின் மதிப்பீட்டின்படி, 86 வயதான காமேனிக்குப் பிறகு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைச் (IRGC) சேர்ந்த தீவிர கடும்போக்குவாதிகள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்களால் ஈரானின் அரசியல் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இராணுவத் தலைவர்கள் நாட்டின் முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனத் தெரிகிறது.
தற்போதைய போர்ச் சூழல், ஈரானின் உள்நாட்டு அரசியலில் கடும்போக்குவாதிகளின் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam