ஈரான் - இஸ்ரேல் போர்:அரசியல் ஆய்வாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் குறித்து அரசியல் ஆய்வாளர் முகமது எல்மாஸ்ரி கவலை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாம் ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைவதற்கான "ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, ஈரானும் தனது பதிலடி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்சரிக்கை
குறிப்பாக, இந்தப் போர் ஈரானிய மக்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இராணுவ இலக்குகளைத் தாண்டி மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலியப் படைகள் மிகக் கனமான வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி முழுமையான குடியிருப்பு வளாகங்களையே அழித்து வருவதாகவும், இதன் மூலம் இந்தப் போர் ஒரு "புதிய மற்றும் மிக மோசமான அத்தியாயத்திற்குள்" நுழையும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 22 மணி நேரம் முன்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri