ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்துக்கள்
தற்போது ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராணுவ நிலைமை மோசமடைந்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இலங்கைக்கு கடும் நெருக்கடி நிலை காத்திருக்கின்றது. எரிபொருள் விலைகள் அதிகரிக்கும். தற்போது வரையிலும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை
மார்ச் மாதத்தின் பின்னர் பின்னர் மிகப்பெரிய அளவில் எரிபொருள் விலை தற்போது அதிகரித்துள்ளது. இந்த போர் நிலைமை மேலும் தீவிரமடைந்தால் கடுமையான பாதிப்புகள் இலங்கைக்கு உள்ளது.
அத்துடன் அந்த 2 நாடுகளிலும் பெருமளவிலான இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் தொழில்வாய்ப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன் விமான போக்குவரத்து பாதைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையினால் விமான நிறுவனங்களுக்கு பாரிய செலவை ஏற்க வேண்டியநிலைமை ஏற்படும்.
இலங்கை அரசாங்கம் அந்நிய செலாவணிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்திற்கு எண்ணெய் கொள்வனவின் போது மேலதிகமாக 300 - 400 டொலர்கள் அதிகம் செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு டொலர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள நாடு என்பதனால் உடனடியாக நிலைமைகளை ஆராய்ந்து செயற்படுவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
