ஹோர்முஸை கடக்கும் கப்பல்கள் பணம் செலுத்த வேண்டும்! வெளியான அதிரடி அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையின் மீதான தனது இறையாண்மையை உறுதிப்படுத்தும் வகையில், அங்கு பயணிக்கும் கப்பல்களுக்கு 'கடப்பு கட்டணம்' (Transit Fees) விதிக்கும் சட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்றக் குழு இன்று, இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரானிய நாணயமான 'ரியால்' (Rial) மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இது ஈரானின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு தந்திரோபாய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
பல நாடுகளுக்கு தடை
அதேநேரம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இந்த நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது ஒருதலைப்பட்சமாகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 வீதம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஈரானின் இந்தக் கட்டண விதிப்பு மற்றும் தடை உத்தரவு உலகளாவிய எண்ணெய் விலையில் கடும் உயர்வை ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கனவே 57,000 துருப்புக்களைக் குவித்துள்ள அமெரிக்கா, ஈரானின் இந்த ஒருதலைப்பட்சமான சட்டத்தை 'சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது' எனக் கூறி முறியடிக்க முயலலாம். இதனால் தரைப்போர் அல்லது நேரடி மோதல் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
தொடர் வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், இந்தச் சட்டத்தின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது.
"இந்த வழித்தடத்தின் அதிகாரம் எங்களிடமே உள்ளது." இதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri