ஜேர்மன் நாட்டவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ஈரான்: எழுந்துள்ள கடும் கண்டனங்கள்
ஜேர்மன் (Germany) மற்றும் ஈரான் (Iran) ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமை கொண்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளமைக்கு ஜேர்மன் தரப்பு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
ஜம்ஷிட் ஷர்மாட் (Jamshid Sharmahd, 69) என்னும் நபருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்ட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு, ஈரானிலுள்ள Shiraz என்னுமிடத்திலுள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
மகளின் கோரிக்கை
இந்நிலையில், அந்த சம்பவத்துக்கும் குறித்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது குற்றம்சுமத்தி, அவருக்கு 2023ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரின் மகள், தனது தந்தைக்கு மரணதண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்துள்ளார். இருப்பினும், நேற்றைய தினம், ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனையை நிறவேற்றியுள்ளது.
இந்நிலையில், ஜேர்மன் நாட்டின் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜம்ஷிடுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
கண்டனங்கள்
அத்துடன், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான அனலேனா பேர்பாக் ஜேர்மன் இரட்டைக்குடியுரிமை கொண்டவரான ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளமைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தனது தரப்பு நியாத்தை எடுத்துரைக்கக்கூட ஜம்ஷிட்டுக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
Die Hinrichtung von Jamshid Sharmahd durch das iranische Regime ist ein Skandal, den ich auf das Schärfste verurteile. Jamshid Sharmahd hat nicht einmal die Gelegenheit erhalten, sich im Prozess gegen die gegen ihn erhobenen Vorwürfe zu verteidigen. (1/2)
— Bundeskanzler Olaf Scholz (@Bundeskanzler) October 28, 2024
அதேவேளை, சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்னேஷனல் அமைப்பும், ஜம்ஷிட்டுக்கு தனது தரப்பு நியாத்தை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Die Vollstreckung des Todesurteils gegen unseren Mitbürger Jamshid #Sharmahd ist ein scheußliches Verbrechen. Der Prozess war ein Hohn für die internationalen Maßstäbe an rechtsstaatliche Verfahren. Das iranische Regime zeigt einmal mehr seinen menschenverachtenden Charakter.… pic.twitter.com/2uwnk6JOru
— Friedrich Merz (@_FriedrichMerz) October 28, 2024