இலங்கையில் பிரித்தானிய பிரஜையால் ஏற்பட்ட குழப்பம் - நள்ளிரவில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கதிர்காமம் நாகவீதியில் உள்ள பிரபல சுற்றுலான விடுதிக்கு கூகுள் மெப் உதவியுடன் பயணித்த வெளிநாட்டவரால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
கூகுள் மெப் உதவியுடன் குறித்த விடுதியை நோக்கி நடந்து சென்றுள்ளார். அதிகாலை 4 மணியளவில் குறித்த விடுதிக்கு அருகில் இந்த நபர் வந்துள்ளார்.
அங்கிருந்த வீடு ஒன்றில் பெண் ஒருவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் கழிப்பறைக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார்.
சுற்றுலா பயணி
இதன் போது வீட்டிற்கு வெளியே வெள்ளை நிறத்தில் நின்ற நபரை பார்த்து பேய் என பயந்து, குறித்து பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
உடனடியாக அந்த பகுதியிலுள்ள மக்கள் குறித்த வெளிநாட்டவரை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்ணுக்கு பாதிப்பு
உடனடியாக நிலைமையை உணர்ந்த வெளிநாட்டவர் கையடக்க தொலைபேசியை காண்பித்து, எவ்வாறு அங்கு வந்தார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரித்தானிய நாட்டவர் அவ்விடத்திற்கு வந்ததற்கான காரணத்தை அறிந்த கிராம மக்கள் அவருக்கு விடுதியின் விலாசத்தை குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டவரால் அச்சமடைந்த பெண் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
