அமீரகத்தில் நடந்த பயங்கர தாக்குதல்.. ஈரானின் மறுப்பும் அதிரடி எச்சரிக்கையும்!
ஐக்கிய அரபு அமீரகம் குறிப்பிட்டுள்ள தாக்குதல்களில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வெளியான ஒரு அறிக்கையில், IRGC செய்தித் தொடர்பாளர் கூறியதாக சர்வதேச ஊடகம் ஒன்று மேற்கோள் காட்டியுள்ளது.
"ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக எந்த ஏவுகணை அல்லது ஆளில்லா விமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை."
ஈரான் திட்டவட்டம்..
மேலும், ஈரான் தனது எந்தவொரு தாக்குதலுக்கும் பொறுப்பேற்றிருக்கும் என்றும், ஐக்கிய அரபு அமீரகம் பதிலடி கொடுத்தால், அதற்கு " மிக மோசமான மற்றும் வருந்தத்தக்க பதிலடி" கொடுக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.

ஈரானில் இருந்து வரும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வந்துள்ளது.
நேற்று 15 ஈரானிய ஏவுகணைகளையும் நான்கு ஆளில்லா விமானங்களையும் இடைமறித்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கோ அல்லது சமீப நாட்களில் நடந்த வேறு எந்தத் தாக்குதலுக்கோ தாங்கள் பொறுப்பல்ல என்று ஈரான் கூறியுள்ளது.
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam