போர்நிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்தில் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்! லெபனான் தாக்குதலுக்கான பதிலடி
அமெரிக்க ஜனாதிபதியுடன் ஈரானுடன் போர்நிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்திற்குள், இஸ்ரேல் லெபனானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிப்பதாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடியுள்ளது என Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் புதன்கிழமை அதிகாலை இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தத்தை அறிவித்தன.
லெபனான் மீதான தாக்குதல்கள்! கடுமையான பதிலடி கொடுக்க தயாரான ஈரான் இராணுவம் - வெளியான அதிரடி அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணை
அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை மீண்டும் சீர்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்திருந்தது.
இந்தநிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் போர்நிறுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அது லெபனானை உள்ளடக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

ஈரான் உடனடியாக நீரிணைகளைத் திறந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், ஜனாதிபதி ட்ரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது, என நெதன்யாகு தனது X தளப் பதிவில் குறிப்பிட்டார்.
இருப்பினும், மற்றொரு பதிவில் அவர், "வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் பிராந்திய நட்பு நாடுகள் பகிர்ந்துகொள்ளும் இந்த இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தம்
இந்த இரண்டு வார போர்நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லெபனானில் மற்றும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் 112 பேர் உயிரிழந்ததுடன், 837 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஈரானில் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. இதற்கு முன்னதாக, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அதிபர் சமீபத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஹெஸ்பொல்லா சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
லெபனானுக்கு எதிரான தாக்குதல்
PBS News-க்கு அளித்த நேர்காணலில், லெபனானில் தாக்குதல்கள் தொடர்வதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, அவர்கள் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை,” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

மேலும், ஏன் லெபனானுக்கு எதிரான தாக்குதல்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று கேட்கப்பட்டபோது, அது ஹிஸ்பொல்லாவைச் சார்ந்தது.
அவர்கள் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. அதையும் விரைவில் கவனிக்கப்படும், என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களைத் தொடர்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு, அது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. அனைவருக்கும் அது தெரியும். அது தனியான மோதல்,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.