ஈரானில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்: மக்கள் மத்தியில் பதற்றம்
ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகர் பந்தர் அபாஸ்–இல் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்பால் ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததுடன் 14 பேர் பாயமடைந்துள்ளனர்.
உள்ளூர் மீட்பு சேவைகள் அதிரடியாகச் செயல்பட்டு, நெருக்கடியான சூழலில் மக்களை பாதுகாக்க முயற்சி செய்ததாக ஊள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெடிப்பு ஒரு வாயு கசிவால் ஏற்பட்டதாக பந்தர் அபாஸ் தீயணைப்பு படைப் பிரிவின் தலைவர் குறிப்பிட்டார்.

ஈரானின் முக்கிய இராணுவ தளபதியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும் இந்த செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
வெடிப்பு இடம்பெற்ற போது துரிதமாக இது எதனால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படாததால், சிலர் இது ஒரு தாக்குதல் என கருதி மக்கள் பீதியடைந்தனர்.
அமெரிக்கா–ஈரான் இடையேயான அரசியல்–படை நடவடிக்கைகள் குறித்து உள்ள விவாதங்களும் இந்தச் சூழ்நிலையை மேலும் பதற்றமாக மாற்றியிருக்கிறது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வெடிப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரணகைள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான்–அமெரிக்கா இடையேயான உறவுகள் தொடர்ந்தும் அசாதாரண சூழ்நிலையில் காணப்படுவதனால் இந்த சம்பவத்தின் போது மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.