நான்கு மடங்கு பதிலடி வழங்கப்படும்..! ட்ரம்பின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த கடுமையான எச்சரிக்கை

Donald Trump United States of America Iran Middle East Strait of Hormuz
By Shadhu Shanker Apr 27, 2026 11:18 AM GMT
Report

அமெரிக்காவுடன் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்து நிலவும் நிச்சயமற்ற நிலையினைத் தொடர்ந்து, வளைகுடா அண்டை நாடுகள் வாஷிங்டனுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் துணைத் தலைவர் எஸ்மாயில் சாகாப் எஸ்ஃபஹானி, ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் தடையை முன்னிட்டு, ஈரானின் அடிப்படை வசதிகள், குறிப்பாக எண்ணெய் கிணறுகள் குறிவைக்கப்பட்டால், அதற்கு நான்கு மடங்கு பதிலடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம் - அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்ப்பில் உலகம்! ஈரான் முன்மொழிந்துள்ள மூன்று கட்டத் திட்டம்

தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம் - அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்ப்பில் உலகம்! ஈரான் முன்மொழிந்துள்ள மூன்று கட்டத் திட்டம்

ட்ரம்பின் அழுத்த அரசியல்  

எங்கள் மீது எவ்வித போர்த் தாக்குதலும் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும். எங்கள் எண்ணெய் கிணறுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சேதமடைந்தால், தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் நான்கு மடங்கு சேதத்தை சந்திக்க வேண்டியிருக்கும், என்று அவர் X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

எங்களுக்கு கணக்கிடும் முறை வேறுபட்டது. ஒரு எண்ணெய் கிணறு சேதமடைந்தால், அதற்குப் பதிலாக நான்கு எண்ணெய் கிணறுகள் சேதப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.இந்த எச்சரிக்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் அழுத்தத்தை அதிகரிப்பதாக கூறியதையடுத்து வெளியாகியுள்ளது.

நான்கு மடங்கு பதிலடி வழங்கப்படும்..! ட்ரம்பின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த கடுமையான எச்சரிக்கை | Iran Big Warning Gulf Nations After Trumps Threats

அவர் தனது Truth Social தளத்தில், “ஈரான் பொருளாதார ரீதியாக சரிந்து வருகிறது. அவர்கள் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க விரும்புகின்றனர். தினமும் 500 மில்லியன் டொலர் இழப்பை சந்திக்கின்றனர், என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், Fox News-க்கு அளித்த பேட்டியில், இந்த அழுத்தம் தொடர்ந்தால் ஈரானின் எண்ணெய் குழாய்கள் சில நாட்களில் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

ஈரானின் பதில்

இதற்கிடையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்து, ஈரானுக்கு மேலாதிக்கம் உள்ளதாக கூறியுள்ளார்.

அவர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், “அவர்கள் தங்களிடம் ‘கார்டுகள்’ உள்ளதாக பெருமை பேசுகின்றனர்.

நான்கு மடங்கு பதிலடி வழங்கப்படும்..! ட்ரம்பின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த கடுமையான எச்சரிக்கை | Iran Big Warning Gulf Nations After Trumps Threats

ஆனால் நிஜத்தில், வழங்கல் (supply) மற்றும் தேவை (demand) சமமாக உள்ளது,” என்று குறிப்பிட்டார். அவரது விளக்கப்படி, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

அதேவேளை, பாப் எல்-மண்டெப் நீரிணை மற்றும் எண்ணெய் குழாய்கள் இன்னும் பயன்படுத்தப்படாத ‘வழங்கல் ஆயுதங்கள்’ என அவர் கூறினார்.

மேலும், அமெரிக்கா தன் பங்காக எண்ணெய் சேமிப்புகளை வெளியிடுவது மற்றும் அதிக விலையால் தேவையை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்..! திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பலத்திற்கும் புதிய சக்தியின் எழுச்சிக்கும் இடையிலான போட்டி

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்..! திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பலத்திற்கும் புதிய சக்தியின் எழுச்சிக்கும் இடையிலான போட்டி

உச்ச கட்ட பதற்றம்

கோடை காலம் எண்ணெய் தேவைக்கு உச்சமாக இருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயரும் அபாயம் இருப்பதாகவும் காலிபாப் எச்சரித்தார்.

நான்கு மடங்கு பதிலடி வழங்கப்படும்..! ட்ரம்பின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த கடுமையான எச்சரிக்கை | Iran Big Warning Gulf Nations After Trumps Threats

இதனால், அமெரிக்க உள்நாட்டு அரசியல் சூழலிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. இந்த வளர்ச்சிகள் அனைத்தும், ஈரான் – அமெரிக்கா மோதல் மேலும் தீவிரமடைந்து, உலகளாவிய ஆற்றல் சந்தைகளில் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US