ஈரானில் அதிரடி நடவடிக்கை! கூடப்போகும் வல்லுநர்கள் - புதிய உச்ச தலைவர் குறித்து வெளியான தகவல்
மத்திய கிழக்கில் தொடர் தாக்குதல் சத்தங்கள் கேட்டு வரும் நிலையில் அயதுல்லா அலி கமெனியின் படுகொலை ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கமெனியின் மகன் மொஜ்தபா புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமைக்கப்படும் குழு
நாட்டை தற்காலிகமாக வழிநடத்த ஜனாதிபதி மசூத் பெஷ்கியான் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 88 பேர் கொண்ட வல்லுநர் குழு விரைவில் கூடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தக் குழுவே புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இதுவரை இல்லாத அளவுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

மோதல் தீவிரமடையும் அச்சம்
இதனால் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதல் மேலும் தீவிரமடையும் என அச்சம் நிலவுகிறது.
இதேவேளை துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் தலைநகர் தோஹாவின் மேல் வானில் இன்று (01) இரண்டாவது நாளாகவும் பலத்த வெடிச்சத்தங்களை கேட்க முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துபாய் முழுவதும் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri