அமெரிக்காவின் டொர்பிடோவுக்கு இலக்கான ஈரானியர்கள்! இலங்கைக்கு வந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ தாக்குதலைத் தொடர்ந்து ஈரானிய கடற்படைக் கப்பல் மூழ்கியதில் இறந்த தனது மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்புமாறு ஈரான் இலங்கையிடம் கோரியுள்ளது.
சம்பவத்தில் இருந்து மீட்கப்பட்ட கிட்டத்தட்ட 90 உடல்கள் காலியில் உள்ள கராபிட்டிய தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார்.
ஈரானின் கோரிக்கை
இந்நிலையில், குறித்த உடலங்களை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஈரானிய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும், திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அந்த ஏற்J1I7ZAபாடுகள் முடியும் வரை, உடல்கள் மருத்துவமனையின் குளிர்பதன கிடங்கு வசதிகளில் வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு வரை கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட 90 உடல்கள் கொண்டு செல்லப்பட்டதாக விஜேமுனி தெரிவித்தார்.
அத்துடன், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இலங்கை நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுகிறது, பிரேத பரிசோதனைகளை நடத்துதல் மற்றும் உடல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அந்தந்த நாடுகளுடன் கலந்தாலோசித்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam