ஈரான் - அமெரிக்கப் போர்: நல்ல ஒப்பந்தம் எட்டும் வரை அவசரமில்லை - ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடனான போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எவ்வித அழுத்தமும் தங்களுக்கு இல்லை என அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனங்களுக்குத் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தரப்பிலிருந்து தமக்கு ஒரு முன்மொழிவு (Offer) வந்துள்ளதாகவும், ஆனால் அது என்ன என்பது குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானியப் போர் விமானங்களின் கர்ஜனைக்கு மத்தியில் தரையிறங்கிய அப்பாஸ் அராக்சி! நள்ளிரவில் நடந்த அவசர பேச்சுவார்த்தை
ட்ரம்ப் அறிவிப்பு
தமக்கு "நேர நெருக்கடி" எதுவும் இல்லை என்றும், அமெரிக்காவிற்குச் சாதகமான ஒரு "சிறந்த ஒப்பந்தம்" கிடைக்கும் வரை பொறுமையுடன் காத்திருக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அவரின் இதே கருத்தை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் இராணுவத் தளபதி டான் கெய்ன் (Dan Caine) ஆகியோரும் வழிமொழிந்துள்ளனர்.
"பேச்சுவார்த்தைகளை முடிக்க எங்களுக்குப் போதுமான நேரம் உள்ளது, நாங்கள் ஒப்பந்தத்திற்காகப் பதற்றமடையவில்லை" என ஹெக்செத் கூறியுள்ளார்.
இராணுவ நடவடிக்கை
அதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தால், ஈரானில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அமெரிக்க இராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளதாகத் தளபதி டான் கெய்ன் எச்சரித்துள்ளார்.

மறுபுறம், ஈரானின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தை முழுமையாக அகற்றுவதற்கு அமெரிக்காவிடமிருந்து "பச்சை விளக்கு" (Green light) கிடைப்பதற்காக இஸ்ரேல் காத்திருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் அதிகார வர்க்கத்தை முழுமையாக ஒழிப்பதே இஸ்ரேலின் இலக்காக உள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த கடுமையான நிலைப்பாடுகள் காரணமாக, இப்பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகின்றது.