ஹோர்முஸ் நீரிணையை கடக்க 15 கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
கடந்த 24 மணிநேரத்தில் ஈரானிடம் அனுமதி பெற்ற பின்னர் மொத்தமாக15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடப்பதற்கு அனுமதி கொடுப்பதாக ஈரானிய செய்தி நிறுவன அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய கப்பல் போக்குவரத்து, போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த சாதாரண அளவை விட மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
15 கப்பல்களுக்கு அனுமதி
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஹோர்முஸ் நீரிணை இனி ஒருபோதும் அதன் பழைய நிலைக்குத் திரும்பாது என தெரிவித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இந்த வழித்தடம் இனி பழையபடி இருக்காது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் பாரசீக வளைகுடா பகுதியில் ஒரு புதிய பாதுகாப்பு ஒழுங்குமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதிக்கட்டத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தனது அதிகாரத்தை ஈரான் மேலும் வலுப்படுத்த முயல்வது தெளிவாகிறது.
