ஐ.பி.எல் ஏலத்தில் பல கோடிகளுக்கு விலைப்போன புதிய இளம் கிரிக்கட் வீரர்கள்! (வீடியோ)
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் இன்றும் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விருந்தகத்தில் இடம்பெற்றது.
ஏலமிடப்பட்ட 600 பேரில் 377 பேர் இந்தியர்கள் ஆவர்.
இவர்களை போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய இளம் விக்கெட் காப்பாளர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், அனைத்துத்துறை ஆட்டவீரர் ஷா்துல் தாக்குர் ஆகியோருக்கு கடும் கேள்வி இருந்தது.
இந்தநிலையில் நேற்று ஏலத்தின்போது திடீரென மயங்கி வீழ்ந்த ஏலக்காரரான Hugh Edmeades சுகமடைந்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார்
Mr. Hugh Edmeades - the IPL Auctioneer - is fine now ? and has a message for all. #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/U7uzt6PIMw
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடியை வழங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனுக்காக 15.25 கோடியை வழங்கியது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட ஏனைய வீரர்களின் விபரங்கள்- * இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை 11.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது
* இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை 1 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது
* இந்திய வீரர் ஜெயந்த் யாதவை 1.70 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் விஜய் சங்கரை .1.40 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் கெளதமை 90 லட்சத்துக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒடேன் ஸ்மித்தை 6 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர் டொமினிக் ட்ரேக்ஸை 1.10 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் மந்தீப் சிங்கை 1.10 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.
* தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை 2.60 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
* தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்கோ ஜேன்சனை 4.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய இளம் வீரர் சையத் கலீல் அகமதுவை 5.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை 2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் சந்தீப் சர்மாவை 50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் சேட்டன் சகாரியாவை 4.20 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இதேவேளை நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம், அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே, இந்திய வீரர் புஜாரா, இந்திய வீரர் சௌரப் திவாரி, அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச், டேவிட் மாலன், இந்திய வீரர் இஷாந்த் சர்மா, தென்னாப்பிரிக்க வீரர் லுங்கிசைனி நிகிடி ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.