உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் : சஜித் மீண்டும் உறுதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) உறுதியளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்த தவறியுள்ளதாக புத்தளத்தில் (Puttalam) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சஜித் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான ஒப்பந்தம்
இந்தநிலையில்,செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டால், தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தன்னை பணத்திற்காக வாங்க முடியாது என்றும், எனவே யாருடனும் சட்டவிரோதமான ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்கவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தம் இருப்பதாகவும் பிரேமதாச மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
சஜித் மற்றும் திஸாநாயக்க இருவரும் இணைந்து தேர்தலில் தம்மை தோற்கடிப்பதற்காக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |