வடக்கு - கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் இன்று சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.12.2023) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
விக்னேஸ்வரன் மறுப்பு
எனினும் குறித்த சந்திப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், இறுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பையடுத்து நாடு திரும்பிய ஜனாதிபதி வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri