காப்பீட்டாளர்கள் - வங்கிகளுக்கு நேரடி தாக்கமா..! பிட்ச் தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள விடயம்
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட திட்டம், காப்பீட்டாளர்கள், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது என பிட்ச் தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்புத் திட்டம் உள்நாட்டு காப்பீட்டாளர்களுக்கான முதலீடு மற்றும் பணப்புழக்க அபாயங்களைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்மொழி குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம்
எவ்வாறாயினும், இந்த முன்மொழிவு இறையாண்மையினது, கடன் நிலைத்தன்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று மதிப்பீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது, உயர்ந்த முதலீடு மற்றும் பணப்புழக்க அபாயங்கள், ஒழுங்குமுறை மூலதன அழுத்தங்கள் மற்றும் குறைவான சாதகமான நிதிக் கண்ணோட்டம் காரணமாக, இலங்கைக் காப்பீட்டாளர்களின் மதிப்பீடுகள், பாதகமான நிலையில் உள்ளன என்பதையும் பிட்ச் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |