கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முதலீடு அவசியம்! திலும் அமுனுகம
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு முதலீட்டின் ஊடாக அபிவிருத்தி செய்வதை எதிர்த்தால், அதனை நிறுத்த நேரிடும் எனவும் ஆனால் முனையத்தை அபிவிருத்தி செய்வது அவசியம் எனில் வெளிநாட்டு முதலீடு தேவை எனவும் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதி நாட்டில் இல்லை. இதனை அபிவிருத்தி செய்ய இலங்கையிடம் பணமில்லை.
இதற்கு காரணம் வேறு எதுவுமில்லை 2015 ஆம் ஆண்டு 7.3 வீத பொருளாதார அபிவிருத்தியுடன் நாங்கள் கையளித்த அரசாங்கத்தை கொரோனா இன்றி, யுத்தமின்றி நல்லாட்சி அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3.2 வீதமாக குறைத்து எங்களிடம் கையளித்ததே இதற்கு காரணம்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதை எதிர்த்தால், அதனை அப்படியே வைத்துக் கொண்டு பழைய முனையத்தின் ஊடாக வேலைகளை செய்து அபிவிருத்தி செய்யாது இருக்க வேண்டும்.
இதன் மூலம் நாட்டுக்கு பெரிய வருமானம் கிடைக்காது. எப்போதாவது முடிந்த நேரத்தில் அபிவிருத்தி செய்துக் கொள்ள முடியும். அதுவும் சிறந்த முறை.
ஆனால், அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் முதலீடு தேவை என்பது மிகவும் தெளிவானது. இந்த முதலீட்டை செய்ய போவது இந்தியாவா, ஜப்பானா, சீனாவா, இங்கிலாந்தா என்பது வேறு விடயம்.
இதனை எதிர்த்தால் நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தினால், கால வரையறைக்குள் அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறையை ஒழிப்பதாக இருந்தால், தமக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பன தமக்கு வழங்கப்பட வேண்டும் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri