வடக்கில் முதலீடுகளுக்கான சாதகமான சூழல் உருவாகி வருகின்றது: வடக்கு ஆளுநர்
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலீடுகளுக்கான சாதகமான சூழல் வடக்கில் உருவாகி வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை பணியாளர்களுக்கான, 'தர முகாமைத்துவம் கருத்துகளிலிருந்து சான்றிதழ் வரை' என்னும் தலைப்பிலான பயிற்சிப்பட்டறை வடக்கு மாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றது.
இந்த நிகழ்வி்ல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி நோக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், முதலீட்டாளர்கள் இங்கு முதலிடும்போது அவர்களுக்குரிய தொழிற்படையை – மனிதவளத்தை தயார்படுத்தவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.
அதற்கான பணிகளையும் நாங்கள் முன்னெடுக்கவேண்டும் என்பதுடன் சமாந்தரமாக ஏற்றுமதியை நோக்கியை தயார்படுத்தலும் எங்களுக்குத் தேவை. எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பயிற்சிப்பட்டறையை ஆரம்பித்து வைத்த ஆளுநர், காலத்தின் தேவையறிந்து யுனிடோ நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சியைப் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
