இலங்கையில் முதலீடு: கோட்டாவின் கருத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதங்கம் (Video)
மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 30 வருடகால யுத்தத்தின் போதும் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். இருந்தாலும் அவர்கள் எப்போதும் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இனவழிப்பு ஆரம்பித்ததிலிருந்துதான் மக்கள் புலம்பெயரத் தொடங்கினர் என புலம்பெயர் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நிலைமை அதள பாதாளத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் பொருளாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையினை நீக்கி அவர்களின் முதலீடுகளை வரவேற்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் உருவாகி வருகின்றன.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். அப்பதிவினூடாக அவர்களின் கருத்துக்கள் வருமாறு,