ஆளும் கட்சி அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை
ஆளும் கட்சியில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
லஞ்சம் ஊழல் மோசடி தகர்ப்பு ஆணைக்குழு இந்த விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆனைக்குழு விசாரணை நடத்தும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை தெளிவாக அறிந்து கொள்ளும் நோக்கில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



