பாரிய மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு செக் வைக்கும் அநுர அரசு
ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஐந்து பேர் மீது பாரிய நிதி மோசடி, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிதி மோசடி
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மீளப்பெறப்பட்டு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட பல வழக்குகளை மீண்டும் திறப்பதற்கு சட்ட திணைக்களம் தயாராகி வருகின்றது.
நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்கள் குழு தொடர்பில் பல்வேறு குழுக்கள் தகவல்களை தேடி வருகின்றன.
அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் மீள் விசாரணை செய்வதிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.